Kalanginathar Siddhar (காலாங்கிநாதர்). வீட்டிலே பெண்டுமக்க ளோடிருந்து விளையாடிக் கொண்டிருந்தால் வருமோஞானம் நாட்டிலே யீதறியா தநேகம்பேர்கள் ஞானம்மென்ன வாதமென்ன யோகமென்ன ஏட்டிலே சுரைக்காயென் றிருந்தாலத்தை என்செயலாம் கறிசமைக்க ஏதுவுண்டோ பாட்டிலே யிருந்தென்ன பலிக்குமோதான் பகருவேன் ஒளிமலையிற் பாய்ந்துயேறே ! ஏறப்பா கண்மூக்கு மத்திக்குள்ளே இதமாகப் பார்டிருந்தாற் பசிதானுண்டோ மாறப்பா அடிமுடியும் நடுவுங்காணும் மயங்காமல் நாளுமதற் குள்ளேசேரும் தேறப்பா யிம்முறையார் பார்க்கப்போறார் தெளிவான தாயெனக்குச் சொன்னவித்தை வீறப்பா அலைந்தாலும் சொல்வாறுண்டோ விளங்குமிந்த நூலிடை தொழிலைப்பாரே !! – ஞான […]







