சித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்

உலக சித்த மருத்துவ நாள் ஏப்ரல் 14 மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் சித்த மருத்துவம் நெடுங்காலமாக அருந் தொண்டாற்றி வந்துள்ளது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் சுவடிகளிலிருந்து சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்தல், சித்த மருத்துவச் செய்திகளைத் தொகுத்து நூலாக்குதல், பொது மக்களிடையேயும் அரசிடமும் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக 19-ம் நூற்றாண்டில் உழைத்த சிலரைப் பற்றி பார்ப்போம்: […]

உண்மையான சித்த மருத்துவர் யார்? How to find true Siddha Doctor?

நம்மைச் சுற்றி அனைத்துத் துறைகளிலும் போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போலிகளால் விபரீதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த விபரீதங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டால், பாதிக்கப்படுவது எளிதில் மீட்க முடியாத நம் உடலின் ஆரோக்கியம். மற்ற மருத்துவப் பிரிவுகளைப் போலவே, சித்த மருத்துவத்திலும் முறையான பயிற்சி பெறாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். இந்தப் போலி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி? தொலைக்காட்சியில் தோன்றி, ’நான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவேன், என்னால் எல்லாமே முடியும்… சித்தர்களின் அருள் எனக்கு […]