மூலிகைச் செடியிலிருந்து (Artemisia annua) மலேரியாவுக்கான மருந்தைப் பிரித்து எடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததற்காக, கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் முதன்முறையாகப் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. சீனப் பாரம்பரிய மருத்துவம் நெடிய வரலாற்றைக் கொண்டது. அதேநேரம் நம்முடைய சித்த மருத்துவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சித்த மருத்துவத்தின் பெருமைகளைப் பலரும் சரியாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம்தான். சித்த மருத்துவம் பற்றி நம்மிடையே பல்வேறு […]








