Pambatti Siddhar (பாம்பாட்டி சித்தர்) Song: காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே ! வாயுவினை இரையாக வாங்கி உண்டே வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில் திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே ! விளக்கம்: காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க அலைந்தாலும், முத்திநிலை அடையமுடியாது. வாசியோகத்தால் வாயுவினை […]