தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டுப் புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் […]