குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது. காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் […]